Breaking News

கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதில் நம்பிக்கையில்லை: கவுதம் கம்பீர்..!!!

இந்திய ஒருநாள், டி20 கேப்டன் தோனியின் வாழ்க்கை எம்.எஸ்.தோனி: தி அன் டோல்ட் ஸ்டோரி என்று படமாகத் தயாராகியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதில் தனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

“கிரிக்கெட் வீரர்கள் குறித்த பயோபிக்சரில் எனக்கு நம்பிக்கையில்லை. நாட்டுக்காக கிரிக்கெட் வீரர்களை விடவும் பங்களிப்பு செய்தவர்கள் பற்றித்தான் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் எடுக்கப்பட வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் பற்றியல்ல.

நாட்டின் நலன்களுக்காக புனிதமான பணிகளைச் செய்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். எனவே அவர்கள் வாழ்க்கையைத்தான் திரைப்படமாக எடுக்க வேண்டும்” என்று கவுதம் கம்பீர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.