Breaking News

அடுத்த 20 ஆண்டுகளில் 100 ஆண்டுகளை மிஞ்சிய வளர்ச்சியை இந்தியா எட்டும்: தொழிலதிபர் முகேஷ் அம்பானி நம்பிக்கை..!!!

காந்திநகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (இடமிருந்து), குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் | படம்: பிடிஐ


அடுத்த 20 ஆண்டுகளில் மனித சமூகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். இந்த வளர்ச்சியானது கடந்த 100 ஆண்டுகளில் எட்டப் பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். தொழில்நுட்பம், டிஜிட்டல் துறை வளர்ச்சி இதை சாத்தியமாக்கும் என்று அவர் கூறினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடத்தும் பண்டிட் தீன தயாள் பெட்ரோலியம் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் உரை யாற்றிய அவர் மேலும் கூறியது:
சில சமயங்களில் நீங்கள் காணும் கனவும் சாத்தியமாகாமல் போகலாம். இவை அனைத்தும் கடந்த கால நிகழ்வுகள். உங்கள் கனவை சாத்தியமாக்க கடின உழைப்பும் தளராத அர்ப்பணிப்பும் தேவை.
உங்கள் கனவு மெய்ப்படுவது அடுத்த 20 ஆண்டுகளில் சாத்தி யமே. அதற்கு தொழில்நுட்பம் குறிப்பாக டிஜிட்டல் நுட்பம் நனவாகாத கனவையும் சாத்திய மாக்கும். மனித சமூகமானது அடுத்த 20 ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சியை நிச்சயம் எட்டும். இந்த வளர்ச்சியானது கடந்த 100 ஆண்டுகளில் எட்டப்பட்டதைவிட அதிகமாக இருக்கும். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மிக வளமான வாய்ப்புகள் காத்திருக் கிறது என்றார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ டேகர் கூறியது: பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. புதிய கண்டுபிடிப்பு கள் இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதை அரசு உறுதியாக நம்புகிறது. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகள் மூலமே இந்தியா வளர்ச்சியடையும் என்பதை உறுதியாக நம்பும் பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம்.
பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டமானது வெறுமனே பொருள்களை இந்தியாவில் தயாரிப்பது மட்டுமல்ல. இந்தியா வில் உள்ள அறிவார்ந்த மாணவர் கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்பதாகும். இங்கு முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் அழைப்பு விடுக்கிறார். புதிய கண்டுபிடிப்புகள், முதலீடுகள், தயாரிப்புகள் மற்றும் விற்பனை இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தும் என்று ஜவடேகர் குறிப்பிட்டார்.