Breaking News

எதிர்ப்பை கண்டுகொள்ளாத கவர்ச்சி நடிகை

நடிகை சன்னிலியோன் வாழ்க்கை கதை கரன்ஜித் கவுர் பெயரில் திரைப்படமாகிறது. சன்னி லியோன் ஆபாச வீடியோக்களில் நடித்துவந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார். சன்னியின் எல்லா செயல்களுக்கும் அவரது கணவர் டேனியல் வெபர் எதிர்ப்பு எதுவும் சொல்லாமல் அவருடன் ஒத்து வாழ்கிறார். சன்னியின் நிஜப்பெயர் கரன்ஜித் கவுர். இதில் கவுர் என்பது சீக்கிய பெண்களுக்கு புனித பெயராக கருதப்படுகிறது. 

சன்னிலியோன் வெளிநாட்டிலிருந்தபோது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதால் தனது நிஜப் பெயரை பயன்படுத்துவதில்லை. இந்நிலையில் தனது வாழ்க்கை படத்துக்கு கரன்ஜித் கவுர் என பெயரிட்டிருப்பதற்கு ஷிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கவுர் என்ற பெயரை சன்னி லியோன் தனது பட டைட்டிலில் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருக்கிறது. 

இதுபற்றி அந்த அமைப்பின் கூடுதல் செயலாளர் தில்ஜித் சிங் கூறும்போது,’சன்னி லியோன் சீக்கிய மதத்தையும் சீக்கிய மதகுருமார்கள் போதித்த போதனைகளையும் பின்பற்றவில்லை. எனவே அவர் கவுர் என்ற பெயரை பயன்படுத்த உரிமை கிடையாது’ என்றார். ஆனால் இந்த எதிர்ப்பு பற்றி சன்னிலியோன் கண்டுகொள்ளவில்லை. மத அமைப்பினரின் எதிர்ப்புக்கு எந்த பதிலும் கூறாமல் தனது பட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதுடன் அப்படத்தின் பிரிமியர் காட்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.